டெல்லி: டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு ராகுல்காந்தி மரியாதை செலுத்தினர். அவருடன் காங்கிரஸ் தலைவர் கார்கே உள்பட பல தலைவர்கள்  உடனிருந்தனர்.

மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பிறகு நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,   “அம்பேத்கர் ஒரு சின்னம். அவர் முழு நாட்டிற்கும் ஒரு பாதையைக் காட்டினார், அவர் நமக்கு அரசியலமைப்பைக் கொடுத்தார். எனவே, நாங்கள் அவரை நினைவில் கொள்கிறோம், அவரது கருத்துக்களையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கிறோம்…

தற்போது,  ஒவ்வொரு இந்தியரின் அரசியலமைப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் அதைப் பாதுகாக்கிறோம், குடிமக்கள் அதைப் பாதுகாக்கிறார்கள்.”

இவ்வாறு கூறி உள்ளார்.