டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் மக்களவை பிப்ரவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அவரது உரையை தொடர்ந்து மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை நடைபெற்றது.
2020 21-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்த புள்ளி விவரத் தகவல்கள் அடங்கிய ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.
அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து எம்.பி.க்கள் கூச்சல் எழுப்பியதால் பிப்ரவரி 1ம் தேதி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.