மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ் கேரளாவை சேர்ந்த அருண் ஆண்டனி என்பவரை நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ், கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.