­ திருப்பதி: குடியிருந்து வரும் வீட்டின் லிப்ட் திடீரென இடையே திறந்ததால், கீழே விழுந்த இஸ்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் அதிகாரி, பரிதாபமாக பலியானார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வசந்தி. இவர் திருப்பதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  குடும்பத்துடன் வசித்து வந்தார். தற்போது கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை காரணமாக, சொந்த ஊருக்கு (திருப்பதி)  சென்றுள்ளார்.

இந்த நிலையில், அவர்  அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே செல்லும் வகையில், 3வது மாடியில் லிப்டுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, லிப்ட் மேலே வருவதற்குள் கதவு மட்டும் தானாகத் திறந்தது. அதை சரிவர கவனிக்காத வசந்தி, லிப்ட் கதவு திறந்ததாக கருதி, காலை வைத்துள்ளார். அதனால் நிலை தடுமாறி லிப்ட் மேலே வராத நிலையில் அதன்மீதுசூ தவறி கீழே விழுந்தார்.

இதனால்  வசந்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்துஅவரது உடலை மீட்டு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த காவல்துறை விசாரணையில், அந்த அடுக்குமாடி  கட்டிடத்தில் உள்ள லிப்ட் பல மாதங்களாகப் பழுதாகிய நிலையிலேயே இயக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.