சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பரபரப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள்  தி.மு.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில்  அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டிலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் பி.எச். மனோஜ் பாண்டியன் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்றது.  பெண் வழக்குரைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தி.மு.கழகத்தின் கொள்கைகளை ஏற்று இணைந்தனர்.

பிரபல வழக்கறிஞர்களான பி. விஜயகுமார் டி. நந்தகுமார் ஏ. சத்யா சி. ராகவன் ஏ.டி. நாகேந்திரன் எஸ். குணசேகரன், எம். பெருமாள் ஜி. ஜெய்சிங்க முத்துக்குமரன் எஸ். பாலாஜி ரோட்டரி என். சிவக்குமார் நிக்சன், அதிசயயா, டி. பவித்ரா, பி. லீனா உள்ளிட்ட முக்கிய வழக்குரைஞர்கள் முதலமைச்சர் முன்னிலையில் முறைப்படி தி.மு.கழகத்தில் இணைந்தனர். இந்த இணைவு விழாவின் போது, அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் தி.மு.க சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா. விடு தலை, வழக்குரைஞர் திருமாறன், மற்றும் வழக்குரைஞர் ஆர்.வி. பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

[youtube-feed feed=1]