மும்பை:
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி -8ம் தேதி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். அவருக்கு வயது 92.  லேசான கொரோனா அறிகுறிகளுடன், தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை  தொடர்ந்து அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஐசியூ-வில் இருக்கும் அவருக்கு டாக்டர் பிரதித் சம்தானி மற்றும் அவரது மருத்துவர்கள் குழு சிகிச்சை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

இந்நிலையில், மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது. லதா மங்கேஷ்கருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லதா மங்கேஷ்கரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர், “இந்தியாவின் இசைக்குயில்” என அழைக்கப்படுகிறார்.