பாட்னா
மத்திய அமைச்சர் அமித்ஷா அரசியல் விட்டு விலக வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, “இப்போது அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது பேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று கூறி இருந்தார்.
அமைசர் அமித்ஷா கூறிய இந்த கருத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அவர் பதவி விலக வலியுறுத்தி வருகின்றன ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகாரின் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் செய்தியாளரிடம்,
“அமித்ஷாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும். அம்பேத்கர் மீது அமித்ஷாவுக்கு வெறுப்பு இருந்திருக்க வேண்டும். அவருடைய இந்த பைத்தியக்காரத்தனமான பேச்சை நாங்கள் கண்டிக்கிறோம்”
என்று கூறி உள்ளார்.