தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , ஜெயராம் , அஸ்வின் ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது
படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய் ‘நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இது தவிர வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி, சுந்தர சோழனாக அமிதாப் பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், பழுவேட்டரையர் வேடத்தில் பிரபுமற்றும் குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.
இந்நிலையில், படத்தின் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது. தொடர்ந்து 100 நாட்கள் தாய்லாந்தில் தங்கி ஷூட்டிங் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான லால் இணைந்துள்ளார்.இந்தப் படத்தின் முன்னணி நடிகர்களோடு இணைந்து வாள் பயிற்சியும், குதிரைப் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் லால்.