நடிகர் விமலுடன் இணைந்து MIK Productions No.1 சார்பில் தயாராகும் ‘குலசாமி’ படத்தை இயக்க திட்டமிருந்தார் சரவண சக்தி.
‘குலசாமி’ பெயரை கில்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவும் செய்தார். மேலும், 25.01.2021 அன்று அப்படத்திற்காக பூஜையும் போடப்பட்டது. இப்படத்திற்கான தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை விரைவில் வெளியிடுவதாக இப்படக்குழு திட்டமிட்டிருந்தது.
ஆனால், சில தினங்களுக்கு முன்பு ராக் ஸ்டார் நடிக்கும் ‘எங்க குலசாமி’ என்று படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் வெளியானது. தான் சிங்காரவேலனிடம் கூறிய கதையும் ‘எங்க குலசாமி’ படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவண சக்தி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கில்டு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, பிரபல பத்திரிக்கையில், ‘இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகிவரும் ‘குலசாமி’ என்ற படத்தின் ஒட்டுமொத்த காப்பிரைட் உரிமை எனது கட்சிக்காரர் கே.விக்னேஷ் குமார் அவர்களிடம் உள்ளது. எனது கட்சிக்காரரின் அனுமதி இல்லாமல் யாரேனும் இப்படத்தை விற்க முயல்வதோ வாங்க முயல்வதோ சட்டப்படி குற்றமாகும். மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வழக்கறிஞர் A.M.ரவீந்திரநாத் ஜெயபால் மூலம் ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.