
சென்னை: காங்கிரஸை மனநலன் பாதிக்கப்பட்ட கட்சி என்று விமர்சித்தமைக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகை குஷ்பு.
தனது சினிமா மார்க்கெட் வீழ்ந்தவுடன், ஆட்சியிலிருந்த திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு, திமுக ஆட்சி இழந்தவுடன், மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.
காங்கிரஸில் இருந்த காலத்தில், பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தார். தற்போது, திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளார்.
இந்நிலையில்தான், காங்கிரஸ் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட கட்சி என்ற விமர்சனத்தை முன்வைத்தார். இதற்கு கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன.
மாற்றுத் திறனாளிகளுக்காக சேவையாற்றும் பலர், குஷ்புவுக்கு தங்களின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதனையடுத்து, தற்போது தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் குஷ்பு.
அந்தக் கருத்து, அவசரப் புத்தியிலும், ஆழ்ந்த கவலையிலும், வேதனையிலும் தெரிவிக்கப்ப்டட ஒன்று என்று விளக்கமளித்துள்ளார் அவர்.
Patrikai.com official YouTube Channel