ண்டியா

ர்நாடகாவில் பெய்து வரும் கனம்ழையால் கே ஆர் எஸ் அணை நிரம்பி உள்ளது.

தற்போது கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 69 ஆயிரத்து 617 கன அடி நீர் வந்து கொண்டிருந்தபோது அணையின் நீர்மட்டம் 122.70 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்ததால், மாலை 6 மணி அளவில் கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி நிரம்பியது.

நேற்று இரவு அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. அப்போதைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரத்து 795 கன அடி  திறக்கப்பட்டிருந்த தண்ணீர் அதிகரிக்கப்பட்டு நேற்று இரவு அணையில் இருந்து வினாடிக்கு 52 ஆயிரத்து 162 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு காவிர்நீர் வரத்து அதிகரிக்க உள்ளது.