மாண்டியா

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

கர்நாடகா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 26 ஆந் தேதி மற்றும் மே மாதம் 7 ஆம் தேதி என 2 கட்டமாக நடைபெறுகிறது. பாஜகவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

தேர்தலில் மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுதியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்ட  நிலையில் தற்போது குமாரசாமியே மாண்டியா தொகுதியில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.