கிருஷ்ணகிரி:
இந்து மதத்தைச் சேர்ந்த கடவுள்களின் படங்களை எரித்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜான் பிரிட்டோ என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் எஸ்.குருபட்டியில் பெந்தகோஸ்தே சபையை நடத்தி வரும் மதபோதகரான ஜான் பிரிட்டோ என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது சபையின் கழிப்பறையில் இந்து கடவுள்களின் படங்களை எரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, ஜான் பிரிட்டோ மீது இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில், பிற மதம் மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதபோதகர் ஜான் பிரிட்டோவை கைது செய்தனர்.
கிறிஸ்தவ மத போதகரான ஜான் பிரிட்டோவின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம். இவர், கிருஷ்ண கிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த எஸ்.குருபட்டியில் ஐந்து ஆண்டுகளாக பெந்தகோஸ்தே சபையை தொடங்கி, அங்குள்ள மக்களிடம் கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து, மதமாற்றம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.