சென்னை:
கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் ஒரு மர்ம தொடர்…என்று தெரிவித்த கமல்ஹாசன் இது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ஜெ.மரணத்தை தொடர்ந்து, அவரது ஊட்டி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்களை தொடர்ந்து சிலர் மர்மமான முறையில் விபத்தில் இறந்தனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது தொடர்பான புகாரில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.\
இந்த நிலையில், தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சமீபத்தில்டில்லி கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் கூறுவதாகவும், கொட சம்பவம் தொடர்ப்பாக 5 பேர் இறந்துள்ள நிலையில், அவை அனைத்தும் திட்டமிட்டு நடத்தப் பட்டது என்றும், இதற்கு பின்னணியில் முக்கிய நபர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,கொடநாடு கொள்ளை சம்பவம் ஒரு மர்ம தொடர் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, இந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதாக தான் முன்பிருந்தே கூறி வருவதாகவும் தெரிவித்தார்.