சென்னை: தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள கிஷான் திட்ட முறைகேடு தொடர்பாக, மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ-105 கோடி திரும்ப வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் அதிக அளவிலான முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து, முறைகேடாக பெற்ற பயனர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. மேலும், இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்த அரசு அலுவலர்கள், தனியார் முகவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளது.
பல கோடி ரூபாய் மீண்டும் திரும்ப பெறப்பட்டு வந்தது. இதையடுத்து கிசான் முறைகேடு வழக்கானது சிபிசிஐடி வசம் சென்றது. இதை தொடர்ந்து கிசான் மோசடியில்
Patrikai.com official YouTube Channel