சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இது 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுகிறது  என அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பேருந்து நிலையத்தின் கட்டிடப் பணிகள் தற்போது  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப் படுகிறது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இன்று அமைச்சர் முத்துசாமி  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசியவர்,  இந்த பேருந்து நிலையம், 2019ல் தொடங்கப்பட்டு 3ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி தற்போது முழுமை அடைந்து உள்ளது.  2023ம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என தகவல் தெரிவித்து உள்ளார்.