கேரள மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
திருச்சூரில் அவர் பங்கேற்ற கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கேரள முன்னாள் டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸ், பா.ஜ.க.வில் இணைந்தார்.
கொரோனா விதிகளை மீறி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் நடத்தியதாக, இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த பா.ஜ.க.வினர் மீது திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“இது, கேரள கம்யூனிஸ்ட் அரசின் பழி வாங்கும் நடவடிக்கை” என மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
“அண்மையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா பங்கேற்ற கூட்டத்தில் பல ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். ஆனால் அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது ஏன் வழக்கு போடவில்லை?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
– பா. பாரதி