திருவனந்தபுரம்:
ஜூன் 1ந்தேதி முதல் கேரளாவில் பெட்ரோல் டீசல் விலை 1 ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதல்வர் அதிரடி பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. தற்போது கச்சா எண்ணையின் விலை குறைவாக இருந்த நிலையிலும், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கடநத் 16 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் ஜூன் 1ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை, எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளதை விட 1 ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்து உள்ளார்.
கேரள முதல்வரின் அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.