
புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பி.சி.சாக்கோ. அவருக்கு வயது 74. கேரளாவைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 10ம் தேதியன்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் செல்வாக்கு மிக்க கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் சரத்பவாரை சந்திக்க வந்தார் பி.சி.சாக்கோ. அவரை சரத்பவார் வரவேற்றார். பின்னர் சரத்பவார் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
சரத்பவார் கூறுகையில், “கேரள முதல்வர் பினராயி விஜயன் என்னைத் தொடர்பு கொண்டு, “பி.சி.சாக்கோ உங்களது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி” என தெரிவித்தார் என்றார்.
[youtube-feed feed=1]