திருவனந்தபுரம்:
புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
சிறப்பான சேவை செய்ய கட்சி துவங்கி இருக்கும் கமல்ஹாசனை வாழ்த்துகிறேன். கேரள மக்களுக்கும் கமல் நெருக்கமானவர். சமூக பிரச்சினையில் நேர்மையை நிரூபித்தவர் அவர்.
சமூக, பொருளதார கொள்கைகளில் உறுதி கொண்டவர். கமலஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதை கவுரமாக கருதுகிறேன். ஜனநாயகத்தை கமல் காப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.