டெல்லி

ம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக தோல்வி  பயத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கி17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை 18 அன்றும் நடைபெறும். 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது..

ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ள தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.,

ஆம் ஆத்மி நிறுவனரான கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்,

“பா.ஜ.க. தோல்வி பயத்தில் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட தெற்கு டெல்லியின் முன்னாள் எம்.பி.யான ரமேஷ் பிதூரியின் பெயர் பா.ஜ.க.வில் இறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர், முதல்வர் அதிஷிக்கு எதிராக கல்காஜி தொகுதியில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

என்று கூறியுள்ளார்.