டெல்லி
அடுத்த வருடம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. மேலும் பா.ஜ.க. 8 தொகுதிகளில் வென்றது, ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
டெல்லி சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்கவைக்க கடுமையாக உழைத்து வருகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணிக்கான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதன்படி காங்கிரசுக்கு 15 இடங்களும், மற்ற இந்தியக் கூட்டணி உறுப்பினர்களுக்கு 1-2 இடங்களும், மற்றவை ஆம் ஆத்மி கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ர்வால் தனது எக்ஸ் வலைதளத்தில் ,
”டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை”
என்று பதிவிட்டுள்ளார்.