டெல்லி

வாக்குகளுக்கு பாஜக பணம் அளிப்பதை ஆர் எஸ் எஸ் ஆதரிக்கிறதா என கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலுக்கான0 வாக்குப்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

\ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதி உள்ள கடித்த்தில்,

”கடந்த காலங்களில் பாஜக செய்த தவறுகளை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா? பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா?

தலித்துகள் மற்றும் பூர்வகுடிகள் வாக்குகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்துக்கு சரியானது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா? பாஜக ஐனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று எண்ணுகிறதா?”

என வினா எழுப்பியுள்ளார்.