சின்னத்திரை நடிகராக வலம்வந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து 2021 ம் ஆண்டு இவர் நடித்த லிப்ட் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பிப். 10 ம் தேதி இவர் நடித்த இரண்டாவது படம் டாடா திரையரங்குகளில் வெளியாகி எதிர்பாப்பை ஏற்படுத்தியது.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் தமிழகமெங்கும் திரையிடப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தனுஷ் டாடா படத்தின் நாயகன் கவினை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கவின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“ஹாய் கவின் நான் தனுஷ் பேசுகிறேன்..
நான் கேட்டது உண்மைதானா என்று அறியவே எனக்கு சிலநேரமானது. அந்த வியப்பில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை.
டாடா படத்தை பார்த்துவிட்டு தனுஷ் சார் எனக்கு கால் செய்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
உங்களின் படங்களை, உங்கள் திறமையை நான் திரையரங்குகளில் பார்த்து வியந்திருக்கிறேன். இன்று உங்களிடமிருந்து வந்த அழைப்பு வெறும் நன்றி தெரிவித்து ஈடு செய்திட முடியாது.
வளர்ந்து வரும் நடிகர்களை பாராட்டுவதற்காக உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களின் ‘வாத்தி’ திரைப்படத்திற்கும் எனது வாழ்த்துகள். உங்களின் எதிர்கால படைப்புகளை பார்க்க காத்திருக்கிறேன் சார்.” என்று பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]