‘மும்பைகர்’ படத்தைத் தொடர்ந்து அடுத்த இந்தி படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.
80க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து தற்போது இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடிக்க இருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன் விக்கி கௌஷலை திருமணம் செய்து கொண்ட கத்ரினா கைஃப் திருமணத்திற்குப் பின் முதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர இருப்பது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுஷ்மான் குரானாவை வைத்து ‘அந்தாதுன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படமான மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை அடுத்த 2022ம் ஆண்டு டிசம்பர் 23 கிறிஸ்துமஸ் சமயத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]