சென்னை:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து திமுக முன்னணி நிர்வாகிகள், கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, பொருளாளர் துரைமுருகன,  ஆர். எஸ். பாரதி, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். கவிஞர் வைரமுத்துவும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பங்கேற்பு..
அண்ணா அறிவாலயத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திமுகவினர் உற்சாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆங்காங்வே கருணாநிதி திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பல இடங்களில் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர்.