டில்லி:

கர்நாடகா சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக போபையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி உச்சநீதிமன்ற பதிவாளரிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது

[youtube-feed feed=1]