பெங்களூரு: மூடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என  கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்தராமையா மனைவிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு என புகார் குறித்த விசாரணைக்கு அனுமதியளித்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சித்தராமையா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, விசாரணைக்கு  கர்நாடக உயர்நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டி உள்ளது. இதனால், அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் மீது மாநிலஅளுநர் வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்க மாட்டார் என மாநிலமுதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநில ஆளுநர் (Thawar Chand Gehlot) தவார் சந்த் ஹெலாட் ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்துஅவர்மீது புகார் பதியப்பட்டது. இதனால், சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள்ளும் புகைச்சல் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த  சித்தராமையா,  இது கர்நாடக அரசைக் குறிவைக்கும் மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி என்றும் கூறியதுடன், மத்திய அரசு மற்றும் கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கை விசாரிக்க தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம்,  முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநரின் அனுமதியை உறுதி செய்துள்ளது. முதல்வர் சித்தராமையா வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி, நாகபிரசன்னா,  மனுவில் கூறப்பட்டுள்ள உண்மைகள்  சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க  விசாரணை தேவைப்படும், அனைத்து செயல்களின் பயனாளிகள் வெளியில் யாரும் இல்லை,  அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால்,   இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி  கூறினார்.

கர்நாடக முதலமைச்சர்மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல்!

ரூ.68 கோடி மோசடி: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மேலும் ஓர் ஊழல் புகார்!