‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ‘ ரா ஒன் ‘உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இரண்டு மகள்களுக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவரின் இளைய மகள் ஷாஸா மொரானி மார்ச் முதல் வாரம் இலங்கையிலிருந்து திரும்பியுள்ளார். திங்களன்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரீம் மொரானியின் மூத்த மகளும் நடிகையுமான ஸோவா மொரானி, மார்ச் இரண்டாம் வாரத்தின்போது ராஜஸ்தான் சென்று திரும்பியுள்ளார். அவருக்கும் இப்போது தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது குடும்பம், வீட்டுப் பணியாட்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரீம் மொரானிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.