கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 42

பா. தேவிமயில் குமார்

வேர்களின் வியர்வை

வேர்கள் என ஒன்று
இருப்பதையே மறந்த உலகமிது!

பூக்களுக்கும் இலைகளுக்கும்
மட்டுமே மரியாதை!!

பழுத்த இலைகள்,
புதிய இலைகள், என
பழமொழி நிரம்பியுள்ளது!!

வியர்வை மிகுந்த வேரை
விரும்புவதில்லை…..
எவரும்

வெட்டிவேராக இருந்தால் மட்டுமே
எட்டிப் பார்ப்பார்கள்…

மண்ணில் கிளை
பரப்பும் வேருக்கு
பரப்புரை தேவையில்லை!!

உண(ர்)வூட்டும் அம்மையப்பர்
வேர்களா??? இல்லை
வேரறுக்கப்பட்டவர்களா??

இன்றைய
தினத்தில் …..
முதியோர் இல்ல மரத்தடியின் வேர்களில்
மனித(முதிய) வேர்கள்
ஓய்வெடுக்கிறார்கள்

பா. தேவிமயில் குமார்

 

[youtube-feed feed=1]