கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 41
பா. தேவிமயில் குமார்

மௌனத்தின் மொழி
ஆண்டாண்டு காலம்
அடிமைகளின் குரல் மௌனமாய் ….
மரணித்து கிடக்கிறது!
இப்போது மட்டும்
எங்களின்
மௌனத்திற்கு
மணிமகுடம் சூட்ட வருகிறார்களா??
இரண்டாம் பாலினம்,
முதல் பாலினத்தின்
ஏவலர்கள் என்பதே
இங்கே உண்மை!!!
எங்கள் இரட்சிப்பு
என்பது எழுத்தில்
மட்டுமே விரவி
கிடக்கிறது!!
ஆசைக்கும் அவசியத்திற்கும்
மட்டுமே உங்களுக்கு
பெண்கள்!!
கவலை வேண்டாம்
மௌனம் எங்கள்
மொழியல்ல!
ஆனாலும் அதை
எங்களின்
தாய்மொழியாக
தத்தெடுத்து கொண்டோம்!!!
தைரியமாக
ஊர் , உலகம் தோறும் மேடைகளில்
வெளிப்பூச்சுக்காக கட்டாயம் பேசிடுங்கள்….
நாங்கள் கைதட்டுகிறோம் எப்போதும் போல
பா. தேவிமயில் குமார்
Patrikai.com official YouTube Channel