சினிமாவில் இன்று இருக்கும் வாய்ப்பு நாளைக்கும் இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது. இதனால் இப்போதுள்ள நட்சத்திரங்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வேறு தொழில்களில் முதலீடு செய்வதுண்டு.

அதில் ஒருவர் – இந்தி நடிகை கங்கனா ரணாவத்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான தலைவியில் நடித்து முடித்து விட்டார். ’தக்கட்’ என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். அடுத்து ‘தேஜாஸ்’ என்ற படத்தில் விமானப்படை ‘பைலட்’ ஆக நடிக்க உள்ளார்.

கையில் நாலு காசு புழங்குவதால், பிரமாண்ட ஓட்டல் கட்ட முடிவு செய்துள்ளார்.

கங்கனா, இமாச்சலபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.அங்குள்ள மனாலியில் அவர் ஓட்டல் கட்ட உள்ளார்.

இடம் பார்த்து விட்டார். கட்டுமான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, பொறியாளர்களுடன் கங்கனா அண்மையில் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்த போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்கனா, “ஓட்டல் ஆரம்பிப்பது எனது கனவு. அந்த கனவு நிறைவேறப்போகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மனாலி, சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் என்பது தெரியும் தானே?

– பா. பாரதி