கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.
நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.
பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல கன்னட திரைப்படத் தயாரிப்பாளரான ராமு கோவிட் தொற்று காரணமாக திங்கட்கிழமை மாலை (ஏப்ரல் 26) காலமானார். அவருக்கு வயது 52.
கன்னட சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் பிரபல நடிகையின் கணவருமான ராமு கொரோனாவுக்கு பலியாகியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை என அழைக்கப்படும் நடிகை மாலஸ்ரீயின் கணவர் ஆவார். ஏகே 47, லாக்அப் டெத், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார் ராமு.