புதுடெல்லி: 
த்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத் தன்னைப்பற்றி குற்றம்சாட்டிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத், இறக்குமதி விலையை குறைப்பதன் மூலம் சீன நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டிய- பாஜக துணைத் தலைவர் பிரபாத் ஜாஹாவிற்க்கும், மத்தியபிரதேச மாநிலத் தலைவர் வி.டி ஷர்மாவிற்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கமல்நாத்தின்  ஆலோசகர் வருண் தன்கா கூறியதாவது: கமல் நாத்திற்கு எதிராக பாஜக தலைவர்கள் இருவரும் அவதூறாகப் பேசியது….. ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் பல செய்தித்தாள்களிலும் மின்னணு ஊடகங்களிலும் பரவி வந்திருக்கின்றது.
பாஜக தலைவர்கள் திட்டமிட்டு கமல்நாத் அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்த  இவ்வாறு கூறியுள்ளதால்., செவ்வாய்க்கிழமை இவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  ஏழு நாட்களுக்குள் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்றால்….. தகுந்த சட்ட நடவடிக்கைகளை கமல்நாத் எடுக்க வேண்டியிருக்கும் என்று வருண் தெரிவித்துள்ளார்.
கமல்நாத் 2004-ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார், அப்போதும் அவர் எந்த தவறும் செய்யாமல் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கமாக இருந்தார்.
மத்திய அமைச்சராக அவர் இருந்த காலகட்டத்தில் கூட எந்த சீன நிறுவனங்களுக்கோ அல்லது மற்ற நாட்டு நிறுவனங்களுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை.
இப்படி இருந்த ஒருவர் மீது அவர்களுடைய கட்சியின் புகழுக்காக பாஜக தலைவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இதனால் அவர்கள் ஏழு நாட்களுக்குள், கமல்நாத் அவர்கள் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்ற்கு பதில் அளித்தே ஆகவேண்டும் என்று கூறி கமல்நாத்தின் ஆலோசகர் வருண் தன்கா பாஜக தலைவர்களை எச்சரித்துள்ளார்.