நடிகை கமல்ஹாசன், படங்களில் பணியாற்றியதற்கான சம்பளத்தை அவர் தனக்கு இன்னும் அளிக்கவில்லையென நடிகை கெளதமி குற்றம்சாட்டி இருக்கிறார்.
திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த நடிகர் கமல்ஹாசனும் நடிகை கவுதமியும் சில மாதங்களுக்கு முன் பிரிந்தனர். தற்போது இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கெளதமி, கமலின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கான சம்பளப் பாக்கியை முறையாக அவர் கொடுக்கவில்லையென குற்றம்சாட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
“நானும் கமலும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிந்தோம். அன்று முதல் தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட அவரது முந்தைய படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கான சம்பள பாக்கியை அவர் இன்னும் அளிக்கவில்லை. இது மிகுந்த வருத்தமளிக்கிறது.
அந்த சம்பள பாக்கிதான் என் வாழ்க்கையைக் கட்டமைக்க எனக்கு இருக்கும் ஒரே பொருளாதார வாய்ப்பு. கமல் மற்றும் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற பலமுறை முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் பலன் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.