மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கைதி திரைப்படம் ஜப்பானிய மொழியில் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.