திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்த ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை   ஜேஷ்டாபிஷேகம் எனப்படும்  சுவாமிகளுக்கு  பல வகையான அபிசஷகங்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு வரும் 9ந்தேதி முதல் 11ந்தேதி வரை ஜேஷ்டாபிசேகம் நடைபெற உள்ளது.  இந்த நாட்களில் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திகள், கோவிலில் உள்ள பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் நடைபெறும். இதையே ஜஷ்டாபிசேகம் என அழைக்கிறார்கள்.

அதன்படி,    வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.  வைகாசி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம்  தொடங்கப்பட்டு கேட்டை நட்சத்திரத் துடன் முடிவடையும் வகையில் நடைபெறும். இதனையொட்டி கோயிலில் உள்ள சம்பங்கி பிரதட்சண பிரகாரத்தில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் ‘அபித்யக அபிஷேகம்’ செய்யப்படும்.

இந்த விழாநாளில்,  முதல் நாளான 9ந்தேதி,   மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி உற்சவருக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் அகற்றப்பட்டு யாகம், அபிஷேகம் மற்றும் பஞ்சா மிருதம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்படும்.

அதன் பிறகு, உற்சவருக்கு வைரக் கவசம் அலங்கரிக்கப்பட்டு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளனர். 2வது நாளில் முத்து கவசமும், 3வது நாளில் திருமஞ்சனங்கள் முடிந்த பின்னர் மீண்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அபிசேஷகங்களை காண ஏராளமானோர் வருவார்கள் என்பதால், அதற்கான டிக்கெட்டுக்கள் ஏற்கனவே விற்பனையாகி உள்ளன. அதாவது,  மார்ச் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஜேஷ்டாபிஷேகத்திற்கான டிக்கெட்களும் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  மேலும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.