அகமதாபாத்: இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கணித்துள்ளார் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்.

இந்திய அணி அனைத்துவித கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கி வருவதால், இந்தக் கோப்பையை அது வெல்வதற்கான வாய்ப்பே அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டின் அக்டோபர் மற்றும் நவம்பரில், உலகக்கோப்பை டி-20 தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.

ஜோஸ் பட்லர் கூறியுள்ளதாவது, “பொதுவாக உலகக்கோப்ப‍ை தொடர்கள் நடைபெறுகையில், போட்டியை நடத்தும் நாடுகளுக்கு எப்போதும் ஒரு சாதக அம்சம் உண்டு. அதுவும் இந்தியா போன்ற ஒரு வலுவான அணி, தனது நாட்டில் போட்டித்தொடர் நடக்கையில், கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்பு மிக அதிகம்.

கடந்த சில உலகக்கோப்பைகளில், போட்டியை நடத்தும் நாடுகள் சிறப்பாக விளையாடியுள்ளன. தற்போதைய நிலையில், இந்திய அணி அனைத்துவகை கிரிக்கெட்டிலும் சிறந்த அணியாக உள்ளது. எனவே, டி-20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் வாய்ப்பே அதிகம்” என்றுள்ளார் ஜோஸ் பட்லர்.