உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட பல படங்களின் மூலம் மக்களை தன்வசப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன்.

மகேந்திரனின் திரைப் பாதையை பின்பற்றி அவரது மகனான ஜான் மகேந்திரன் இயக்குனரானார். இவர் இயக்கத்தில் வெளியான சச்சின் திரைப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவரது மகன் கெவின் ஆடம்ஸ் விசித்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறார். Publicity designer என்று சொல்லப்படும் திரைப்பட விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். விசித்திரன் படத்தின் விளம்பர போஸ்டர்கள் அனைத்தும் இவர் கைவண்ணத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

விசித்திரன் படத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார். ஜோசப் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.