நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில், இன்னும்கூட தெளிவான முடிவுகள் வெளியாகாத நிலையில், ஜோ பைடன் வென்றுவிட்டதாக அவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிக்கு தேவையான 270 எலக்டோரல் காலேஜ் ஓட்டுகள் என்ற எண்ணிக்கையை ஜோ பைடன் ஏற்கனவே நெருங்கியிருந்தாலும், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களின் நிலை என்ன? என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வ முறையில் விடை கிடைக்காமலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வென்று விட்டதாக, அவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ‘President Elect’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.