அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
2020 தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டு வென்ற ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
80 வயதான ஜோ பைடன் அமெரிக்காவின் அதிக வயதான அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதாக இன்று அறிவித்துள்ள பைடன், அமெரிக்காவை மீட்பதற்காக தான் தொடங்கிய பணியை முடிக்க 2024ல் தன்னை அதிபராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.