ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா, ஓமர் அப்துல்லா ஆகியோர், நவம்பர்1ந்தேதிக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஷரத்துப்படி அவர்கள் வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சட்டம், 1984 காரணமாக முன்னாள் முதல்வர்களால் இதுவரை சொத்துக்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது, இது 1996 வரை பல முறை திருத் தப்பட்டு அதிக சலுகைகள் மற்றும் சலுகைகளை உள்ளடக்கியது.
தற்போது காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அரசு பங்களாக்களில் பல காலமாக வசித்து வந்த மாஜி முதல்வர்கள் காலி செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019 நடைமுறைக்கு வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் பள்ளத்தாக்கில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, முன்னாள் முதல்வர்களும் தங்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசு பங்களாக்களில் வாடகை ஏதும் செலுத்தாமல் இலவசமாக வசித்து வருகின்றனர். அவர்களும் தற்போது காலி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இரு முதல்வர்களும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்படி, இதுவரை அரசு பங்களாக்களில் கோடிக்கணக்கில் செலவழித்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களை கூறி ஒமர் அப்துல்லாவும், மெகபூபாவும் அரசு பங்களாக்களிலேயே தங்கி வருகின்றனர்.
தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட உள்ளது. இதனால் காஷ்மீர் நிர்வாகம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. இதன் காரணமாக மெகாபூபா, உமர் அப்துல்லா வீடுகளை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.