விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு அறிக்கையை குறித்து ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவ குழுவினர், ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால், அவரது பெற்றோர், அதை எற்க மறுத்தனர். மாணவி ஸ்ரீமதியின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து  மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் நடத்தினர். இதை காவல்துறை கண்டுகொள்ளாத நிலையில், இந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்பட சில அமைப்பு கள் இந்த விஷயத்தில் உள்ளே புகுந்து, தனியார் பள்ளியை அடித்து நொறுக்கி, அங்கிருந்து ஏராளமான பேருந்துகளுக்கு தீ வைத்து நாசப்படுத்தியது.

இந்சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாணவியின் உடல் ஜூலை  14ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  பிஆனால், அதை மாணவியின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். போஸ்ட்மார்ட்ம் செய்யும்போது, தங்களது தரப்பு மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கும் போடப்பட்டது. இதையடுத்து,   சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் மற்றும் அரசு மருத்துவர்கள் மூன்று பேர் கொண்ட குழு முன்னிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி மாணவியின் உடன் மீண்டும்  மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதை ஏற்க மாணவியின் பெற்றோர் மறுத்து விட்டனர்.

இதையடுத்து, உயர்நீதிமன்றம், மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ய, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் குஷகுமார் சாஹா, தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் சித்தார்த் தாஸ், தடயவியல் துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய குழுவை நீதிமன்றம் நியமித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, புதுச்சேரி ஜிப்மர் குழுவினரிடம், ஶ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கையையும் கடந்த 1ம் தேதி ஜிப்மர் அளிக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, தாங்கள் ஒரு அறிக்கை தயாரித்து, அதை   விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.