ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று டாக்டர் சுதா ஷேசய்யன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்க இன்று மருத்துவர்கள் செய்தி யாளர்களை சந்தித்து வருகிறார்கள்.

அப்போது டாக்டர் சுதா சேஷய்யன், “ ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான். அவர் மரணமடைந்த பிறகு, 5-ந் தேதி 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது.

ஜெயலலிதா பெரும் தலைவர். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும், பல லட்சம் மக்களும் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். அப்போது யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது.

இதே போன்று எம்ஜிஆர் மரணம் அடைந்த போதும் செய்யப்பட்டது” என்று டாக்டர் சுதா தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த புள்ளிகள் குறித்த கேள்விக்கு அப்படி தான் பார்க்கவில்லை. உடலை பதப்படுத்தும் போது ஐந்தரை லிட்டர் திரவம் உள்ளே செலுத்தப்படும்.

அப்போது கூட அவருக்கு கன்னத்தில் எந்தவிதமான ஓட்டைகளையும் தான் பார்க்கவில்லை என்று டாக்டர் சுதா தெரிவிததார்.