திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள ஆரணியில் இன்று திறக்கப்பட இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த எம்.ஜி.ஆர். சிலை உள்பட பல்வேறு கட்சி கொடிக்கம்பங்கள் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் அகற்றப்பட்டன.
இந்நிலையில் ஆரணி பஸ் நிலையம் அருகே, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளை அதிமுகவினர் மீண்டும் நிறுவினர். இந்த சிலைகள் இன்று திறக்கப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பகுதியில் இன்று காலை திரண்ட திமுகவினர் உள்பட எதிர்க்கட்சியினர், அங்கு நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா, எம்ஜிஆரின் சிலைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.