டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு அக்டோபர் 3ந்தேதி நடைபெறும் என மத்திய மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
தொற்று தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக, நாடு முழுவதும் நடைபெற இருந்த பல்வேறு நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய உயர் கல்வி நிறுவனங்கsன ஐஐடி, என்ஐடி போன்ற பிரபலமான கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேவதற்காf ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயில முடியும்.
நடப்பாண்டு முதல், ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனப்டி, முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கொரோனா தொற்றின் 2வது அலையின் பரவல் தீவிரமடைந்தால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு வரும் அக்டோபர் 3-ம் தேதி நடத்தப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றித் தேர்வுகள் நடைபெறும்’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.