பெங்காலி மொழியில் வெளியான படம் ‘KONTTHO’. வங்காள நடிகர் ஷுபோ பிரசாத் முகர்ஜி- நந்திதா ராய் ஜோடியாக நடித்திருந்தார்கள். இந்த படம் மலையாளத்தில் ரீ-மேக் செய்யப்படுகிறது.
படத்தின் பெயர் ‘MERI AWAZ SUNO’’ ஜெயசூர்யா – மஞ்சு வாரியார் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. பிரிஜேஷ் சென், இந்த படத்தை டைரக்டு செய்கிறார்

இவர் ஜெய்சூர்யா நடித்த ‘கேப்டன்’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர்.
ஜெயசூர்யா – சென் கூட்டணியின் அடுத்த படமான ‘வெல்லம்’, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் தியேட்டரில் வெளியான முதல் படம்.
இந்த கூட்டணியின் மூன்றாவது படைப்பான புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முகங்கள் இல்லை. ரேடியோவும், மைக்கும் மட்டும் உள்ளது.
“எல்லைகளை கடந்து நான் நடித்த படம் மலையாளத்தில் உருவாவது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார், வங்காள நடிகர், ஷிபோ பிரசாத்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]