சென்னை

ஜெயா டிவி கார் ஓட்டுனர் சரவணன் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் பல தொடர் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.   கொடநாடு எஸ்டேட் வாட்ச்மேன் ஓம் பகதூர்,  கார் ஓட்டுனர் கனகராஜ்,  சயனின் மனைவி, சயனின் மகள் என பல மரணங்களை தொடர்ந்து தற்போது இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளது.

ஜெயா டிவியில் கார் ஓட்டுனராக இருந்த சரவணன் என்பவர் மர்ம மரணம் அடைந்துள்ளார்.  அசோக் நகரில் இருந்து ஒரு கிணற்றில் அவர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.