டோக்யோ:

177 திமிங்கிலங்களை வேட்டையாடி கொன்று குவித்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் திமிங்கிலங்கள் அதிக அளவில் இருக்கிறது.பலவேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் அதிகாரப்பூர்வக திமிங்கில வேட்டையை ஜப்பான் நடத்தி வருகிறது.

திமிங்கில வேட்டையை நிறுத்துவது தொடர்பாக சர்வதேச திமிங்கில வேட்டை ஆணைய ஒப்பந்தத்தில் ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளது. ஆனாலும் அறிவியல் ஆராய்ச்சிக்காக திமிங்கிலங்களைக் கொல்லலாம் என்ற அந்த ஒப்பந்தத்தின் சரத்துகளில் உள்ள வசதியை பயன்டுத்தி ஜப்பான் இந்த வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான வேட்டையை முடிந்துள்ளதாக ஜப்பான் மீன்வளத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரி கோஹி கூறுகையில், ‘‘ கடந்த ஜூன் மாதம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 3 கப்பல்கள் தற்போது வேட்டை முடிந்து திரும்பியுள்ளன. 43 மிங்கே வகை திமிங்கிலங்களும், 134 செய் வகை திமிங்கிலங்களும் கிடைத்துள்ளன.

இந்த வேட்டை மூலம் நடத்தப்படும் ஆராய்ச்சியின் விளைவாக திமிங்கிலங்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியும். வர்த்தக ரீதியிலான் திமிங்கில வேட்டையில் ஜப்பான் ஈடுபட திட்டமிட்டுள்ளது’’ என்றார்.

நார்வே, ஐஸ்லாந்து ஆகிய இரு நாடுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக திமிங்கில வேட்டையில் ஈடுபடுகின்றன. உணவுக்காக வர்த்தக ரீதியிலான திமிங்கில வேட்டையில் ஜப்பான் ஈடுபட முடிவு செய்துள்ள நிலையில், திமிங்கில உணவு மீதான ஜப்பான் மக்களின் மோகம் குறைந்து வருவதாகவே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.