ஜெருசலெம்: இஸ்ரேல் நாட்டில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3-ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு பிரதமா் நாஃப்டாலி பென்னட் உத்தரவிட்டு உள்ளார். 3-ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல் நாடாக இஸ்ரேல் வெளியிட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பூசி ஒன்றே தீர்வு என சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி வருகிறது. இருந்தாலும், கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில் பரவி வருவதால், தடுப்பூசியின் பயன்பாடும் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது 2 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை தடுப்பதில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக பல நாடுகள் 3வது டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து சிந்தித்து வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் நாடு முதன்முதலாக வயதானவர்களுக்கு 3வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்து உள்ளது.
இதுதொடா்பாக பிரேசில் பிரதமா் நாஃப்டாலி பென்னட் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது, கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தடுப்பூசிகள் சிறப்பான பணியாற்றுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகளால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பிலிருந்து தப்பித்து வருகின்றனர். இருந்தாலும், தொற்று பரவல் உருமாறிய நிலையில் பரவி வருவதால், எ அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய காய்ச்சல் தடுப்பூசிகளைப் போல, கொரோனா தடுப்பூசிகளும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.
இதனால், நாட்டில்ஏற்கெனவே இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 3-ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. வயதானவர்கள் உடனே 3வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
3வது டோஸ் தடுப்பூசியை அந்நாட்டு அதிபர் ஐசக் ஹொசாக் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நபராக இன்று எடுத்துக்கொள்கிறார். அதைத்தொடர்நது, வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு முதல் 3-ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டு உள்ளது.